Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனிமி படத்தில் ஆர்யாவின் தோற்றத்தை வெளியிட்ட இயக்குனர்!

எனிமி படத்தில் ஆர்யாவின் தோற்றத்தை வெளியிட்ட இயக்குனர்!
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (15:35 IST)
எனிமி படத்தில் வில்லனாக நடிக்கும் ஆர்யாவின் புகைப்படத்தை இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாலினி நடித்து வந்த நிலையில் ஆர்யாவுக்கு ஜோடி யார் என்பதை படக்குழுவினர் அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது மலையாள நடிகையான மம்தா மோகந்தாஸ் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மம்தா தமிழில் குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ஆர்யாவின் பர்ஸ்ட் லுக்கை படத்தின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீண்ட நாள் காதலியை திருமணம் செய்த ‘மாஸ்டர்’ நடிகர்!