'கபாலி' வெற்றியை அடுத்து ரஜினியின் அடுத்த படமான 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
முதலில் இந்த படத்தின் கதை ஹாஜி மஸ்தான் கதை என்று தகவல் வந்ததால், அவரது வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் விடும் கடிதம் ஒன்று வந்தது. இந்த கடிதத்திற்கு தனுஷ் நேற்று பதிலளித்தார்.
இந்த நிலையில் 'ரஜினி 161' படத்தில் இருந்து திடீரென எடிட்டர் பிரவீன் கே.எல் விலகிவிட்டார். கால்ஷீட் காரணமாக விலகிவிட்டார் என்று கூறப்பட்டாலும் அதை யாரும் நம்ப தயாராக இல்லை. ரஜினி படத்தை விட வேறு எந்த படத்தின் கால்ஷீட் முக்கியம் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் மேலும் ஒருசில தொழில்நுட்ப கலைஞர்கள் ரஞ்சித் டீமில் இருந்து விலகவிருப்பதாகவும் கோலிவுட்டில் வதந்தி பரவி வருவதால் படக்குழுவினர் டென்ஷனில் உள்ளனர்.