காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பாலிவுட் படம் ஒன்றிற்கு தடை விதிக்கக் கோரி குரல்கள் வலுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு மற்றும் இந்திய ராணுவம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக ஹிந்தியில் வெளியாக இருந்த படம் ஒன்றை தடை செய்ய கோரி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹிந்தியில் வெளியாகவுள்ள அபீர் குலால் என்ற அந்தப் படத்தில் இந்தி நடிகை வாணி கபூர் மற்றும் பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படம் மே 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்தப் படத்தை ஆர்த்தி எஸ் பக்ரி இயக்கியுள்ளார்.
இந்த அபீர் குலால் படமானது இந்தியா பாகிஸ்தான் எல்லைகளை கடக்கும் ஒரு காதலர்களின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீரில் நடந்துள்ள இந்த தாக்குதலை தொடர்பு அந்த படத்திற்கு தடை கோரி குரல்கள் உயர்ந்துள்ளன. அதற்கு படத்தின் கதை அம்சம் மட்டுமல்லாமல் அதில் ஹீரோவாக நடித்துள்ள பவாத் கான் ஒரு பாகிஸ்தானி்யர் என்பதும் காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து பவாத் கான் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Edit by Prasanth.K