Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது அணைத்திட்டத்துக்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது… துரைமுருகன்!

Webdunia
புதன், 26 மே 2021 (17:21 IST)
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கர்நாடக அரசின் மேகதாது அணைத்திட்டத்துக்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதி அளிக்காது எனக் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் தலைக்காவிரில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில்  வருடத்திற்கு 177. 25 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென உச்ச நீதிமன்றம்  கர்நாட அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுப்படி  மாதம் தோறும் திறந்துவிடப்படும் குறிப்பிட்ட அளவு டிஎம்சி தண்ணீர் அளவு உள்ளதா என்றால்,  மழை இருந்தால் தான் தண்ணீர் என கர்நாடக அரசு கூறிவருகிறது.

இந்நிலையில், கர்நாடக அரசு, காவேரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு தெரிவித்து மேகதாதுவில் அணைகட்டுவதை தடுக்க  பலத்த முயற்சிகளை எடுத்து வருகிறது.ஆனால் கர்நாடக அரசு கேட்பதாக இல்லை. இந்நிலையில் நேற்று தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் அணை கட்டுவது குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ‘கர்நாடகாவில் அணைகட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதி அளிக்காது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அஜித்தோடு அடுத்த படத்துக்கு துண்டு போட்டு வைத்த பிரபல இயக்குனர்!

நான் கட்சி ஆரம்பிப்பது உறுதி.. விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பேன்: கூல் சுரேஷ்

அடுத்த கட்டுரையில்
Show comments