பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளை நோயாளிகளுக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக பாஜக எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா காரணமாக அரசு மருத்துவமனைகளில் 80 சதவீதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் இப்படி ஒதுக்கும் படுக்கைகளை போலியான பெயர்களில் பதிவு செய்து அதை பிறகு நோயாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்பனை செய்வதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலத்தில் அந்தக் கட்சியின் எம் பி யே இப்படி குற்றம் சாட்டியுள்ளதால் இது பரவலாக கவனத்தைப் பெற்று சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விசாரித்து சம்மந்தப்பட்டவர்கள் தண்டனை அளிக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.