Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துக்ளக் தர்பார் இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா!

துக்ளக் தர்பார் இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா!
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (17:10 IST)
துக்ளக் தர்பார் படத்தை இயக்கிய டில்லிபிரசாத் தியானதயாள் இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் திரையரங்குகள் தற்போது திறக்காத காரணத்தால் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது. இதனால் வரும் விநாயகர் சதுர்த்தியில் இந்த படம் சன் டிவியில் துக்ளக் தர்பார் ஒளிபரப்பாக இருப்பதாகவும் அதன் பின்னர் சன் நெக்ஸ்ட் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனது முதல் படமே திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாவதால் இயக்குனர் டில்லி பிரசாத் தீனதயாள் அப்செட்டில் இருக்கவே, துக்ளக் தர்பார் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே அடுத்த பட வாய்ப்பையும் கொடுத்துள்ளாராம். அந்த படத்தில் நயந்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த பாய் பிரண்டையும் துரத்த போகும் ஸ்ருதி ஹாசன் - அப்பறோம் எதுக்கு காதல்?