Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனது உடல்நலனைப் பராமரிக்க எனக்கு இடைவெளி தேவைப்படுகிறது… குறைவான படங்களுக்கான காரணம் சொன்ன துல்கர் சல்மான்!

எனது உடல்நலனைப் பராமரிக்க எனக்கு இடைவெளி தேவைப்படுகிறது… குறைவான படங்களுக்கான காரணம் சொன்ன துல்கர் சல்மான்!

vinoth

, செவ்வாய், 15 அக்டோபர் 2024 (08:32 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரீட்சியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து துல்கர் சல்மானின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த தற்போது அவர் நடிப்பில் லக்கி பாஸ்கர் என்ற படம் உருவாகி ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. இந்நிலையில் அவர் அளித்த ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஏன் அதிக படங்களில் நடிப்பதில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் “என் உடல்நலனைப் பராமரிக்க எனக்கு இடைவெளி தேவைப்படுகிறது. எனக்கு சில உடல்நல பிரச்சனைகள் உள்ளன. அதற்கு நானே காரணம். அதனால்தான் கடந்த ஆண்டில் நான் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தேன்” எனக் கூறியுள்ளார். திரையுலகில் அறிமுகமான 13 ஆண்டுகளில் இதுவரை 43 படங்களில் துல்கர் சல்மான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்தார்த் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் பாம்பே ஜெயஸ்ரீ மகன் அம்ரீத்!