Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தை ரிலீஸ் செய்யும் துல்கர் சல்மான்..!

vinoth
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (10:19 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய ‘வேரபாரர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலம் ரிலீஸாகிறது. இருவரும் இணைந்து புறநானூறு படத்தில் நடிக்க இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த படம் கைவிடப்பட்டு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ என்ற படமாக உருவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments