தீபாவளி பிளாக்பஸ்டர் ‘டியூட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
திங்கள், 10 நவம்பர் 2025 (12:40 IST)
ப்ரதீப், மமிதா பைஜு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் ‘டியூட்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. ஆறு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 35 கோடி ரூபாய் என்றும் போட்டதை விட இரு மடங்கு இலாபத்தை இந்த படம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது வரை கணிசமான திரையரங்குகளில் இந்த படம் ஓடிவரும் நிலையில் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 14 ஆம் தேதி ஐந்து மொழிகளில் இந்த நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. திரையரங்கு போல ஓடிடியிலும் இந்த படம் ஹிட் அடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தர்மேந்திரா உயிருடன் தான் உள்ளார். தயவு செய்து வதந்தி பரப்ப வேண்டாம்: ஹேமாமாலினி

பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா நலமாக உள்ளார்

மின்னல் வேகத்துலப் போறாங்களே… அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

மக்கள் நல்ல கதைகளைத் தேடுகிறார்கள்… விளம்பரம் செய்யாமலேயே F1 எப்படி ஓடுகிறது? – அனுராக் காஷ்யப் கேள்வி!

ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கிய பராசக்தி படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments