Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதைப்பொருள் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான ரகுல் ப்ரீத் சிங்!

Advertiesment
போதைப்பொருள் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான ரகுல் ப்ரீத் சிங்!
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (14:49 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
 
கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த புகாரை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர். அதில் பல நடிகர் நடிகைகள் சம்மந்தப்பட்டிருந்ததாக கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதனால் அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்து. அதன்படி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகனின் 3வது பிறந்தநாள் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் - ஷாக் ஆகாதீங்க!