Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு… முதல் பார்ட் மாதிரி ஆக்கிடாதீங்கப்பா!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (09:29 IST)
சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த மோகன்லாலின் திருஷ்யம் 2 படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையடுத்து இப்போது அந்த படத்தின் மற்ற மொழி ரீமேக் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தி ரீமேக் உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திருஷ்யம் 1 ரீமேக்கில் எல்லா மொழிகளிலும் ஹிட்டானாலும் இந்தியில் மட்டும் அட்டர் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது திரிஷ்யம் 2 படத்தில் அக்‌ஷய் குமார், தபு மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார். வரும் நவம்பர் 18 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments