Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டாருக்கு அமலாக்கத்துறை சம்மன்...ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
சூப்பர் ஸ்டாருக்கு அமலாக்கத்துறை சம்மன்...ரசிகர்கள் அதிர்ச்சி
, சனி, 14 மே 2022 (16:56 IST)
சூப்பர் ஸ்டார் நடிகர்  மோகன் லாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.இவர், கேரள மா நிலக் கொச்சியைச் சேர்ந்த மோன்சன் மாவுங்கல் புராதன பொருட்கள் விற்பனை செய்ய்ம் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த    நிறுவனத்திற்கு சினிமா பிரபல சினிமா நடிகர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் மோகன்லால், உள்ளிட்ட பலரும் அவரிடம் பழங்காலப் பொருட்கள் வாங்கியுள்ளனர்.

மோன்சன் மாவுங்கலிடம் புராதன பொருள் வாங்கிய ஒருவர் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கூறினார். இதுதொடர்பாக போலீஸார் மாவுங்கல் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில், மாவுங்கல் நிறுவனத்திற்கு வந்து சென்ற மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் உள்ளிட்ட பிரபலங்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

எனவே மத்திய அமலாக்கத்துறையினர் நடிகர் மோகன்லாலுக்கு இது தொடர்பாக சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், அடுத்த வாரம் அமலாக்கத்துறைட்யினர் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐக்கிய அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு