Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

Advertiesment
Tommy Genesis

Prasanth K

, செவ்வாய், 24 ஜூன் 2025 (15:04 IST)

சமீபத்தில் வெளியான ஆங்கில ஆல்பம் பாடல் ஒன்றில் காளி வேஷத்துடன், பிகினி உடையில் டாமி ஜெனிசிஸ் என்பவர் தோன்றிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கனடாவை சேர்ந்த டாம்மி ஜெனிசிஸ் பிரபலமான மாடலாகவும், பாடகராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் டாம்மி ஜெனசிஸ் ;’ட்ரு ப்ளூ’ என்ற ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காளி தேவி போல உடல் முழுவதும் நீலத்தை பூசிக் கொண்டுள்ள அவர், பிகினி மட்டும் அணிந்து கவர்ச்சியாக இருப்பது இந்து மதக் கடவுள்களை இழிவுப்படுத்துவதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 

மேலும் பாடல் முழுவதும் பல ஆபாச உடல்மொழிகளை காட்டும் அவர் கையில் சிலுவையை வைத்துக் கொண்டு அதை நக்குவது போன்றவற்றை செய்வது இரு மதங்களையுமே இழிவுப்படுத்துவதாக உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் அந்த பாடலை நீக்க வேண்டும் என்றும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் அவரது பாடல்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?