Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவர்களுடன் என்னை கம்பேர் பண்ணாதீங்க – ஸ்ருதி ஹாசன்

Advertiesment
அவர்களுடன் என்னை கம்பேர் பண்ணாதீங்க – ஸ்ருதி ஹாசன்
, வியாழன், 20 ஜூலை 2017 (13:12 IST)
அப்பா, அம்மாவுடன் என்னை கம்பேர் பண்ணாதீங்க” என்று கதறுகிறார் ஸ்ருதி ஹாசன்.



 
ஸ்ருதி ஹாசன் நடிக்கவந்து கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டன. ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவந்த ஸ்ருதிக்கு, அப்பா கமல் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ மட்டுமே கைவசம் இருக்கிறது. ‘சங்கமித்ரா’ படத்துக்காக மற்ற படங்களை ஒதுக்கிய ஸ்ருதி, அந்தப் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.

சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது, சினிமாவில் நுழைய வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால், வாய்ப்புகளை அடுத்தடுத்து பெறுவது என்பது சிக்கலான விஷயம்தான். கடினமாக உழைத்தால் மட்டுமே தொடர் வாய்ப்புகளைப் பெறமுடியும். ‘நான் உடனடியாக கமலாகவோ, சரிகாவாகவோ ஆகவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அது கொஞ்சம்கூட சாத்தியமற்ற விஷயம். ஒவ்வொரு படங்களாக கற்றுக்கொண்டு தான் அவர்கள் இந்நிலையில் இருக்கிறார்கள். நான் மட்டும் உடனே அவர்கள் மாதிரி எப்படி ஆகமுடியும்?” என்று கதறுகிறார் ஸ்ருதி ஹாசன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறுக்கி அணைத்து முத்தம் தருமோ என கேட்ட ரசிகருக்கு கூலாக பதிலடி கொடுத்த நடிகை