இளையதளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி என்றாலும் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்பட பல்வேறு வழிகளில் செலவு செய்து கொண்டாடி வருகின்றனர். இதற்காக ரசிகர்கள் பலர் கடன் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் விஜய் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் சாந்தனு கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பள்ளிப்பைகள், பெண்களுக்கு தையல் இயந்திரம், உள்ளிட்டப் பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க பொருப்பாளார் குஷி ஆனந்த், “தனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கடன் வாங்கி கொண்டாடக் கூடாது என்றும் தன்னால் ரசிகர்கள் யாரும் கடனாளியாவதை விரும்பவில்லை என்றும் விஜய் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.