Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயவுசெய்து 'பாகுபலி'யை பார்க்காதீங்க -தனுஷ், மிஸ் பண்ணிடாதீங்க-ஐஸ்வர்யா தனுஷ்

Advertiesment
, சனி, 29 ஏப்ரல் 2017 (06:22 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளியின் 'பாகுபலி 2' நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படத்தை நேற்று கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் பிரபலங்களும் பார்த்துவிட்டனர்.



 


இந்நிலையில் இந்த படத்தை தனுஷ் மற்றும் அவரது மனைவி தியேட்டரில் பார்த்துவிட்டு தங்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த படம் குறித்து தனுஷ் கூறியபோது, 'மனதில் என்ன இருக்கிறது என்பதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இப்படத்தை வர்ணிக்க வார்த்தையே இல்லை. பாகுபலி 2 படக்குழுவினருக்கு என்னுடைய சலூட். தயவு செய்து இப்படத்தை தியேட்டரில் பார்க்கவும், திருட்டு டிவிடியில் யாரும் பார்க்க வேண்டாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஐஸ்வர்யா தனஷு கூறியபோது, ', ராஜமௌலி சார் நீங்கள் வித்தியாசமானவர். இப்படத்தை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க என்று கூறியுள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா மட்டுமின்றி பல கோலிவுட் திரையுலக பிரமுகர்கள் இந்த படத்தை சிலாகித்து விமர்சனம் செய்து வருகின்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கின்றது. ஸ்டண்ட் சில்வா