Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படகு கவிழவும் இல்ல.. விபத்து நடக்கவும் இல்ல! வதந்தி பரப்பாதீங்க! - காந்தாரா தயாரிப்பாளர் வேண்டுகோள்!

Prasanth K
செவ்வாய், 17 ஜூன் 2025 (19:21 IST)

காந்தாரா 2 படப்பிடிப்பின்போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக வெளியான செய்தி குறித்து படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

 

ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் காந்தாரா. இதன் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவின் சிவமொக்காவில் உள்ள மாணி அணை நீர்த்தேக்கப் பகுதியில் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும், ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோர் நீந்தி தப்பித்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவன நிர்வாகி ஆதர்ஷ் பேசியபோது “நாங்கள் சென்ற எந்த படகும் கவிழ்ந்து விபத்தாகவில்லை. படக்குழுவினர் பத்திரமாக மாணி நீர்த்தேக்கத்தின் அருகே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஒரு பெரிய படகு போல செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. மழை காரணமாக அதன் மேல் பகுதி கவிழ்ந்தது. ஆனால் அந்த நேரத்தில் அங்கு நடிகர்களோ, வேறு யாருமோ அங்கே இல்லை.

 

வனத்துறை, உள்ளூர் காவல்துறை என அனைவரிடமும் உரிய அனுமதி பெற்று, தகுந்த பாதுகாப்புகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எனவே ஒவ்வொரு வதந்தியையும் காந்தாரா படத்துடன் இணைப்பதை நிறுத்துங்கள். ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தர நாங்கள் உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படமாகிறது மேகாலயா ஹனிமூன் கொலை: ராஜா குடும்பத்தினர் சம்மதம்.. டைட்டில் அறிவிப்பு..!

40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய Mr.Beast! நேராக வீட்டுக்கு சென்று பரிசளித்த Youtube CEO!

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

அடுத்த கட்டுரையில்
Show comments