சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிக்கும் டான் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்டண்ட் இயக்குனர் விக்கி.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ள டான் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ், சிவாங்கி  மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர் நடிக்கின்றனர்.
 
									
										
			        							
								
																	இப்போது கோயம்புத்தூரில் முழு வீச்சில் நடக்கும் படத்தின் படப்பிடிப்பில் முக்கியமான ஸ்டண்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு விட்டதாக படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் விக்கி கூறியுள்ளார்.