Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒத்திவைக்கப்பட்ட டாக்டர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

ஒத்திவைக்கப்பட்ட டாக்டர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
, புதன், 10 மார்ச் 2021 (16:13 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் அந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இப்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகளவிலான பணப்புழக்கத்தை செய்வது சிரமமான காரியமாக இருக்குமாம். 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்ய உரிய ஆவணங்கள் வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தை பின் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் அடுத்த ரிலிஸ் தேதி மே மாதம் 13 ஆம் தேதியாக இருக்கும் என திரையுலகில் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவரசா படத்தில் இருந்து விலகிய மீண்டும் ஒரு இயக்குனர்!