Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவிலும் டாக்டர் படம் ஹவுஸ் புல்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (17:42 IST)
டாக்டர் படம் இன்று முதல் கேரளாவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 2வது நாளில் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது. 

இதனிடையே சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இதுவரை 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் தியேட்டர்களில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த 5 படங்களில் டாக்டர் படமும் ஒன்று என்று கூறப்படுகிறது.  இந்த படம் தீபாவளி வரை திரையரங்குகளில் ஓடினால் மொத்தமாக 70 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் திரையரங்குகள் இதுவரை திறக்கப்படாமல் இன்றுதான் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரிலீஸான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடுகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments