டாக்டர் படம் சிவகார்த்திகேயனை காப்பாற்றுமா?

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (12:01 IST)
இயக்குனர் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 
 
கொரோனாவிற்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் ஒரு பெரிய ஹீரோவின் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தான். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஹீரோ படத்திற்கு பின்னர் இப்போது தான் ஒரு புதிய படம் வெளியாகிறது. 
 
இதுதவிர கோலமாவு கோகிலா என்ற படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதாலும் டாக்டர் படம் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். அதேபோல் டாக்டர் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து விட்டது. தற்போது வரை அனைத்து சோசியல் மீடியாக்களிலும் படம் பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்களை மட்டுமே பரப்பி வருகின்றனர். 
டாக்டர் படத்தின் டிரைலரை பார்த்து படம் சீரியசான ஆக்சன் படம் என நினைத்தால் பயங்கர காமெடி படமாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதாவது காமெடி கலந்த ஒரு ஆக்சன் படமாக உள்ளதாம். குடும்பத்துடன் சென்று பார்க்க ஏற்ற படம் என படம் பார்த்த அனைவருமே சர்ட்டிபிகேட் வழங்கி வருகிறார்கள்.
 
பல பிரச்சனைகளை தாண்டி படம் வெளியாகி உள்ளதால் எப்படி இருக்குமோ என்ற பயத்தை போக்கி படம் முதல் நாளே நல்ல பெயரை பெற்று விட்டது. தாமதமாக வந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு தரமான படத்தை பார்த்த திருப்தி இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். 
டாக்டர் படம் எப்படி இருக்கும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ இல்லையோ விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள். தற்போது டாக்டர் படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்த பின்னரே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள். இனி பீஸ்ட் படம் குறித்து எந்த கவலையும் இல்லாமல் இருப்பார்கள் என்பது டாக்டர் படத்தை பார்த்த பின்பு தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments