Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரைஸா என்னை மிரட்டுகிறார்…. மருத்துவர் குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (18:13 IST)
நடிகை ரைஸா தன்னை மிரட்டுவதாக அழகு நிபுணர் பைரவி புகாரளித்துள்ளார்.

தவறான ஃபேஷியல் காரணமாக தனது முகம் முழுவதும் வீங்கி இருப்பதாக பிக்பாஸ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் சமீபத்தில் பியூட்டி பார்லர் சென்று ஃபேஷியல் செய்வதில் ஏற்பட்ட தவறு காரணமாக அவரது முகம் திடீரென வீங்கிவிட்டது.

இதுகுறித்து ஃபேஷியல் செய்த பியூட்டி பார்லரில் உரிமையாளருடன் தான் பேச முயன்றபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் வெளியூர் சென்று விட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்ததாகவும் தனது இன்ஸ்டாவில் அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் ரைசாவுக்கு சிகிச்சை அளித்த பைரவி ‘இரு பக்கமும் சீராக இல்லாத முக அமைப்புக் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையே ரைஸாவுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை எடுத்தால் ஒரு வாரத்துக்கு வீங்கியே இருக்கும். ஏற்கனவே ஒரு முறை அவர் இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால் ரைசா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்’ எனக் கூறியுள்ளார். 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments