Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டுபோடும் போது வடிவேலு என்ன செய்தார் தெரியுமா?

Advertiesment
Do you know
, வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (08:39 IST)
தமிழகத்தில் நேற்று வேலூர் தவிர அனைத்து தொகுதிகளிலும் மக்களவை தேர்தல் சிறப்பாக நடைபெற்றன. மக்கள் அனைவரும் தங்கள் கடமையை ஆற்ற பொறுப்புணர்வுடன் வாக்களித்தனர்.
ஓட்டு பதிவு நாளான நேற்று காலை முதல் மாலை வரை அனைத்து ஓட்டுச்சாவடிகளும் பரபரப்பாக இயங்கின. 
 
சில இடங்களில் வன்முறை காணப்பட்டது. ஆனால் போலீஸார் எந்த அசம்பாவிதங்களும் நேராமல் தடுத்தனர்.
 
இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் நகைச்சுவை  நடிகர் வடிவேலு வாக்களித்தார். அப்போது அவர் தனக்கே உரிய அல்ட்ரா காமெடி செய்தார். தனது உடலை அசைத்து லேசாக நடனம் ஆடுவது போன்று தலையைத் தூக்கி மீடியாக்களைப் பார்ப்பது  குதித்து பின்னர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
 
வடிவேலுவின் நடனத்தை எல்லா மீடியாக்களும் கவர் செய்தன.
 
அதன் பிறகு வடிவேல் கூறியதாவது :
webdunia
இது மிகப்பெரிய ஜன்நாயக நேரம். கொண்டாட வேண்டிய வேண்டியது. இளைஞர்கள் நன்றாக யோசித்து நல்லவர்களுக்கு ஓட்டு வேண்டும். உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டது. இளைஞர்கள் தான் அம்மா, அப்பாவுக்கு எடுத்துச் சொல்லி ஓட்டுப்போட வைப்பார்கள். எல்லாரும் இந்த தேர்தலுக்குப் பிறகு நன்றாக இருப்பார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நன்றாக வேண்டும்.யாருக்கு ஒட்டு போட வேண்டும் என்று சொல்லவில்லை.இவ்வாறு தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டோ வெளியிட்ட சின்மயி... பங்கமாய் கலாய்த்த இயக்குநர்