Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''மாமன்னன்'' படம் பார்த்த நடிகர் கமல் என்ன சொன்னார் தெரியுமா?

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (19:39 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

உதயநிதி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  மாமன்னன். இப்படத்தில்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இப்படம் ஜூன் மாதம்  29 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இயக்குனர் செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  மாமன்னன் திரைப்படத்தின் முன்பதிவு நேற்று   முன்தினம் முதல் இணையத்தில் மாமன்னன் படத்துக்கு முன்பதிவு தொடங்கியது.

இப்படத்தை ரிலீஸுக்கு முன்பே பார்த்த நடிகர் தனுஷ் “மாமன்னன் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு என்று கூறி இப்படத்தில் நடித்த நடிகர்களை பாராட்டியதுடன், ஏ ஆர் ரஹ்மான் சாரின் அழகான இசை”என்று கூறியுள்ளார்.

இதற்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும்  உதயநிதி ஸ்டாலின் இருவரும் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, நடிகர் உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’#MAAMANNAN திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் @ikamalhaasan சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவைத் தொடங்கிய ராம்சரணின் ‘கேம்சேஞ்சர்’ படக்குழு!

மறைந்த நகைச்சுவைக் கலைஞரின் பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்?

விடுதலை 2 படத்தை சிறுவர்கள் பார்க்கலாமா?... சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்!

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கவலை… வழக்கு நடப்பதால் சந்திக்க முடியவில்லை – அல்லு அர்ஜுன் வருத்தம்!

பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்!

அடுத்த கட்டுரையில்
Show comments