மாமன்னன் படத்துக்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் திரைப்பட தணிக்கை துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், திரைப்படம் மக்கள் பார்க்கவே என்றும், இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள் என்றும், எனவே சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையினர் அதை பார்த்து கொள்வார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பேச்சுரிமை, கருத்துரிமை அனைவருக்கும் உள்ளது என கூறி அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
மாமன்னன் திரைப்படம் வெளியானால் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை இன்று நடந்த நிலையில் இந்த விசாரணையில் முடிவில் நீதிபதிகள் மேற்கண்ட கருத்தை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது