Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் சீசன் 2 தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா?

Advertiesment
பிக்பாஸ் சீசன் 2 தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா?
, வெள்ளி, 6 அக்டோபர் 2017 (17:31 IST)
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவுற்ற நிலையில் அடுத்த சீசனை தொகுத்து வழங்குபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பிக்பாஸ் சிசன் 2 அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி 100 நாட்கள் நிறைவடைந்து, ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. மூலு பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிரபலமடைந்ததோடு,  விளம்பர வாய்ப்புகளும், பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.  
 
இந்நிலையில் மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதனை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் சூர்யா தரப்பினர் இந்த செய்தியை மறுத்துள்ளனர். அவர் தற்போது படங்களில் பிசியாக உள்ளதாக தெரிவித்தனர். எனவே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியில்  உண்மையில்லை' என்று கூறியுள்ளனர்.
 
தற்போது நடிகர் அரவிந்த் சாமி பிக்பாஸ் சீசன் 2-வை தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 2 குறித்த அறிவிப்பை விரைவில் பிக்பாஸ் தயாரிப்பு குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக் பாஸில் ஒரு சார்பாக நடந்துகொண்ட கமல்ஹாசன்: ஜூலி குற்றச்சாட்டு!