Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிட்டையரான இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த உதயநிதி – இணைய உடன்பிறப்புகள் ஆர்ப்பரிப்பு !

Advertiesment
ரிட்டையரான இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த உதயநிதி – இணைய உடன்பிறப்புகள் ஆர்ப்பரிப்பு !
, புதன், 20 நவம்பர் 2019 (14:20 IST)
சைக்கோ படத்தில் இளையராஜாவுக்கு உதயநிதி வாய்ப்பு கொடுத்ததாக இணைய உடன்பிறப்பு ஒருவர் ஆர்ப்பரிக்க ஆரம்பித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகர் இடம்பிடிக்க அவரது படத்தின் பாடல்கள் ஹிட்டாக வேண்டியது அத்தியாவசியம். இந்த வகையில் ராமராஜன், பாண்டியன், கார்த்திக், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோரின் பட்ங்களுக்கு இளையராஜா தன் பாடல்கள் மூலம் அங்கிகாரத்தைப் பெற்றுத்தந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இளையராஜா இசையமைத்து மிஷ்கின் இயக்கும் படத்தின் ‘உன்ன நெனச்சு’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இந்த பாடலின் மூலம் உதயநிதிக்கும் மக்கள் மனதில் நல்ல இடம் கிடைக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத உடன்பிறப்புகள் உதயநிதிதான் ரிட்டையரான இளையராஜாவுக்கு இந்தபடத்தில் வாய்ப்புக்கொடுத்தார் என்கிற ரீதியில் பேச ஆரம்பித்துள்ளனர். அப்படிபட்ட ஒரு இணைய உடன்பிறப்பின் முகநூல் பதிவு :-

ராஜா இசைஞானிதான். மறுப்பவர் எவரும் இல்லை!.ராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் வளரும் நடிகர்களான பாண்டியன், ராமராஜன், ராஜ்கிரன், கார்த்திக், பிரபு என பலரும் ராஜாவைத் தேடிச் சென்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் வரவிற்கு பிறகு ராஜாவிற்கு பெரிய அளவிலான ஹிட் படங்கள் கடந்த 20 வருடங்களில் இல்லவே இல்லை!! இப்போது ரஹ்மான் காலம் போயி அனிருத்கள் காலம்!!

இந்நிலையில் வளரும் நடிகராய் இப்போது டிரண்டில் உள்ள இசையமைப்பாளர்களைத் தேடி அவர்களது நிழலில் தான் வளர நினைக்காமல் தன் மீது நம்பிக்கை வைத்து ரிட்டையர்ட் இசையமைப்பாளரைத் தேர்ந்தெடுத்த உதயநிதியின் தில்லை தன்னம்பிக்கையை மனதாரப் பாராட்டுகிறேன்!!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவுக்கு ’கோயிலில் அர்ச்சனை’ செய்த வெளிநாட்டு ரசிகர் ! வைரல் போட்டோ