Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி-விக்னேஷ் சிவன் திடீர் சந்திப்பு! நயன்தாராவுக்காக லீவ் கேட்டாரா?

ரஜினி-விக்னேஷ் சிவன் திடீர் சந்திப்பு! நயன்தாராவுக்காக லீவ் கேட்டாரா?
, வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (22:06 IST)
சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்து பேசியுள்ளார்.
 
'தர்பார்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில் விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்துள்ளது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது ரஜினியின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளாரா? என்பது குறித்த ஊகங்கள் வெளியாகி வருகின்றது.
 
webdunia
ஆனால் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவலின்படி 'தர்பார்' படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்களை எழுதுவதாகவும் அதில் ஒன்று ரஜினி-நயன்தாரா ரொமான்ஸ் பாடல் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சில சேட்டைக்கார நெட்டிசன்கள், நயன்தாராவுக்கு லீவ் கேட்கவே விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்ததாக கமெண்ட் அளித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஸ்டரோடு கிளாமர் போஸ்: வாங்கிக்கட்டி கொண்ட காயத்திரி