ஜப்பான் என்ற பெயரில் விஷ்ணு விஷால் நடிக்க இருந்த படம்… பிரபல இயக்குனரின் பதிவு!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (15:04 IST)
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய படங்களுக்குப் பிறகு கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் எஸ்ஆர் பிரபு தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் இதே தலைப்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்ததாகக் கூறியுள்ளார். அதில் “நடிகர் விஷ்ணு விஷாலுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடக்க வேண்டிய படம்.. பல்வேறு காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டு நடக்க வில்லை. இப்போதும் அவ்வப்பொழுது அந்த படத்தை பண்ணலாம் சார் என்று விஷ்ணு அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவார். அந்த கதைக்கு வைத்த தலைப்பு. தலைப்புகளில் நமக்கு இருக்கும் அதீத காதல் இருக்கே... அது மிக பெரியது.” எனக் கூறி, அந்த படத்துக்காக தான் வடிவமைத்திருந்த முதல் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments