Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரரைப் போற்றுதான் உன் உச்சம் - சூர்யாவை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாராட்டு!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (15:52 IST)
இயக்குனர் வசந்த் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவரைப் பாராட்டி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் வசந்த் சூர்யாவை 1996 ஆம் ஆண்டு சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் அறிமுகப்படுத்தினர். அதன் பின்னர் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்நிலையில் இயக்குனர் வசந்த் தான் அறிமுகப்படுத்திய நடிகர் சூர்யாவின் சமீபத்தைய படமான சூரரைப் போற்று குறித்து பாராட்டி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் வசந்தின் கடிதம்:-

அன்புள்ள சூர்யாவுக்கு,
இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை, நெடுமாறன் ராஜாங்கத்திற்கு. முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை உன் ஆட்சிதான். காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய்! தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இதுதான் உன் உச்சம்’ இப்போதைக்கு!! நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.

முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத் தன்மை, அதைச் சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிகிறது. கனல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்துக்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURIYA". என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ. எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது. உச்சி முகர்ந்து மகிழ்கிறேன்''.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments