Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா ராஜினாமாவால் தள்ளிப்போகும் இயக்குனர் சங்க தேர்தல் !

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (11:47 IST)
இயக்குனர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளதால் தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக ஒருமனதாகப் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சங்கத்துக்குள்ளேயே இதனால் புகைச்சல் உருவானது. இதையடுத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாரதிராஜா. மேலும் ‘ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக பதவியை ராஜினாமா செய்கிறென்.தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்வானதால் ஏற்படும் சங்கடங்கள் உருவாகுவதை தவிர்ப்பதற்காகவே இதைச் செய்துள்ளேன்.மூத்த இயக்குநராக சங்க வளர்ச்சிக்கு எனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும்’ என்று தெரிவித்தார்.

அவரின் ராஜினாமாவால் ஜூலை 14 ஆம் தேதி நடக்க இருந்த தேர்தல் ஜூலை 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பொதுக்குழு கூட்டம் ஜூலை 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments