Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரியல் சூப்பர் ஸ்டார் திருமுருகனின் அடுத்த சீரியல் ஷூட்டிங் தொடக்கம்.. மெட்டி ஒலி இரண்டாம் பாகமா?

vinoth
வெள்ளி, 22 நவம்பர் 2024 (12:55 IST)
மெட்டி ஒலி தொடர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சன் டீவியில் ஓளிப்பரப்பாகி மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன் முதலில் 1000 எபிசோட்கள் ஒளிப்பரப்பப்பட்ட தொடரும் இதுவே ஆகும். இந்த நாடகத்தை இயக்கி அதில் முக்கியக் கதாபாத்திரமான கோபி எனும் கேரக்டரில் நடித்தார் இயக்குனர் திருமுருகன்.

இதையடுத்து அவர் பரத், வடிவேலு, நாசர் மற்றும் சரண்யாவை வைத்தும் எம் மகன் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின்னர் பரத் நடிப்பில் முணியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் அவர் மீண்டும் சீரியல் பக்கமே திரும்பினார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நாதஸ்வரம்’ ’தேன்நிலவு’ ’குலதெய்வம்’ ’கல்யாண வீடு’ ஆகிய சீரியல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் தன்னுடைய யுடியூப் சேனலில் தன்னுடைய அடுத்த சீரியல் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருந்தார். அதையடுத்து இப்போது அந்த சீரியலின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்த சீரியல் மெட்டி ஒலி சீரியலின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments