Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு சினிமாவுக்குப் பாகுபலி… தமிழ் சினிமாவுக்கு கங்குவா… இயக்குனர் சுசீந்திரன் பாராட்டு!

vinoth
செவ்வாய், 19 நவம்பர் 2024 (13:56 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம்  கடந்தவாரம் உலகம் முழுவதும் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறது.

இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமானக் காரணமாக ஒன்றை சொல்லலாம். படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தைப் பற்றி படக்குழுவினர் கொடுத்த ஓவர் பில்டப்தான் அது. செல்லும் மேடைகளில் எல்லாம் அவர்கள் ஆற்றிய புகழுரைகள் ரசிகர்களுக்கு திகட்டுமளவுக்கு அமைந்தது.

படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் படக்குழுவினர் சும்மா இல்லாமல் மீண்டும் மீண்டும் படம் பற்றி புகழ்ந்து பேசி மேலும் மேலும் ரசிகர்களை சீண்டி வருகின்றனர். இந்நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்திரன் படம் பற்றி பேசும்போது “ சூர்யாவின் நடிப்பு உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது. உலகத்தரம் வாய்ந்த படைப்பைக் காலம் தாழ்த்தி கொண்டாடிவிடாதீர்கள். கங்குவா உங்களை மகிழ்விப்பான். தெலுங்கு சினிமாவுக்கு  பாகுபலி மாதிரி, தமிழ் சினிமாவிக்கு கங்குவா.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments