Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’வஞ்சம் தீர்த்தாயடா’ – இயக்குனர் சுசி கணேசனின் அடுத்த படம்!

’வஞ்சம் தீர்த்தாயடா’ – இயக்குனர் சுசி கணேசனின் அடுத்த படம்!
, திங்கள், 3 ஜனவரி 2022 (10:15 IST)
இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளரான சுசிகணேசன் பைவ் ஸ்டார் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய திருட்டு பயலே திரைப்படம் அவருக்கு கவனத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பின்னர் இயக்கிய கந்தசாமி உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் அவர் மி டூ சர்ச்சையிலும் சிக்கியதால் அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது அவர் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார். அந்த படத்துக்கு வஞ்சம் தீர்த்தாயடா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு கொரோனா! – தடுப்பூசி போட்டும் தாக்கியதாக தகவல்!