Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உனக்காக ரூ.5 கோடி செலவு செய்ய என்னால முடியாது: அனுஷ்காவிடம் இயக்குனர் கறார்

உனக்காக ரூ.5 கோடி செலவு செய்ய என்னால முடியாது: அனுஷ்காவிடம் இயக்குனர் கறார்
, வியாழன், 6 ஜூலை 2017 (04:28 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின்போது அனுஷ்காவை உடல் எடையை குறைக்க சொல்லி இயக்குனர் கேட்டுக்கொண்டார். ஆனால் ஒரு யோகா டீச்சராக இருந்தும் அனுஷ்காவால் உடல் எடையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறைக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்று ரூ.5 கோடி செலவு செய்து அனுஷ்காவை கிராபிக்ஸ் மூலம் ஒல்லியாக்கினார் ராஜமெளலி



 
q
 
இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்கின்றார். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபாசுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ள அனுஷ்காவை இயக்குனர் சுஜித் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்றும், பாகுபலி படக்குழுவினர் போல தன்னால் ரூ.5 கோடி செலவு செய்ய முடியாது என்றும் கறாராக கூறிவிட்டாராம்
 
இதனால் வேறு வழியின்றி தற்போது உடல் எடையை குறைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அனுஷ்கா. அனேகமாக அவர் சர்ஜரி செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை விட பலமடங்கு புகழ் பெற்ற 'தெறி' வில்லன்