Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

vinoth
புதன், 25 ஜூன் 2025 (08:29 IST)
8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். அந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றும், அவருக்கு நல்ல பெயர் கிடைத்தும் அடுத்த படத்தை அவர் இயக்கி முடிக்க  5 ஆண்டுகள் ஆனது. அதர்வாவை வைத்து அவர் இயக்கி வெளியிட்ட குருதி ஆட்டம் திரைப்படம் ரிலீஸாகி படுதோல்விப் படமாக அமைந்தது.

இதனால் அவர் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தற்போது ‘3BHK’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அஜித்தை இயக்குவது குறித்த தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீகணேஷ்.

அதில் “நான் அஜித் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரை வைத்துப் படம் இயக்க வேண்டுமென்றால் நான் அதற்கானத் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் சில சரியான படங்களைக் கொடுத்துவிட்டு அவருடன் இணைந்து படம் பண்ண முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்” எனக் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீகணேஷ் அஜித்துக்காகக் கதை சொல்லியுள்ளதாகவும், விரைவில் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

சினிமாவில் பல நாட்களாகப் போதைபொருள் பயன்பாடு உள்ளது –நடிகர் விஜய் ஆண்டனி பதில்!

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments