Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் சிவாவின் தந்தை மரணம்: திரையுலகினர் அஞ்சலி

இயக்குனர் சிவாவின் தந்தை மரணம்: திரையுலகினர் அஞ்சலி
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (20:13 IST)
அஜித்தின் வீரம் வேதாளம் விவேகம் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கியவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த என்ற படத்தை இயக்கி கொண்டு வருபவருமான சிறுத்தை சிவாவின் தந்தை என்று காலமானார். இதனை அடுத்து திரையுலக நேரம் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 
 
கார்த்தி நடித்த சிறுத்தை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படும் இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று மாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சிவாவின் தந்தை ஜெயக்குமார் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் இன்று மறைந்ததாகவும் அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளன 
 
மறைந்த ஜெயக்குமார் ஒரு டாக்குமென்டரி போட்டோகிராபர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாவின் தந்தை மறைந்ததை அடுத்து இயக்குனர் சிவாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகிய புகைப்படங்களை அள்ளிவீசும் சமந்தா - மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்