Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரத்குமாரின் கருத்து தேவையற்றது : பொங்கியெழுந்த சீனுராமசாமி

சரத்குமாரின் கருத்து தேவையற்றது : சீனுராமசாமி

சரத்குமாரின் கருத்து தேவையற்றது : பொங்கியெழுந்த சீனுராமசாமி
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (11:30 IST)
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி, ராதிகா, தமனா ஆகியோர் நடித்து வெளியான படம் தர்மதுரை.


 

 
இப்படத்தை பார்த்த சரத்குமார், படத்தின் டைட்டில் கார்டில் ராதிகாவை அவமதித்துவிட்டதாக கருத்து தெரிவித்திருந்தார்.
 
இதற்கு பதிலளித்த சீனுராமசாமி “தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ராதிகாவை நடிக்க வைக்க ஒரு வருடம் அலைந்தேன். அவரை சந்திக்க முடியவில்லை. அதனால் சரண்யா நடித்தார். அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. 
 
ராதிகாவை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசைப்பட்டேன். டைட்டில் கார்டில் அவருடைய பெயரை தனியாக போட வேண்டும் என்று கேட்டிருந்தால் அதை செய்திருப்போம். 
 
ஆனால் அதை சரத்குமார் வெளியே கருத்து கூறியிருப்பது தேவையற்றது. ராதிகாவின் கதாபாத்திரம் அவ்வளவு அருமையானது. கண்டிப்பாக இந்தப்படம் அவருக்கு புகழை சேர்க்கும். கவனக்குறைவாக இருந்த விஷயத்துக்கு சரத்குமார் கருத்து சொல்லியிருக்கிறது. இது அவசியம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணா படத்தில் நம்ம கட்டப்பாவும் இருக்காக