Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மி அரைத்து சமையல் செய்யும் விஜய் சேதுபதியின் இயக்குனர் - வைரலாகும் வீடியோ!

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (11:58 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடித்துள்ளனர்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அம்மியில் மனைவிக்கு மசாலா அரைத்து கொடுக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கூடல் நகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சமூகம் திரும்பி பார்க்கும் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும்,  தற்போது விஜய் சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்ணைத் தாண்டி வருவாயா கதையை நான் எழுதியதே அவருக்காகதான்.. கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

கென் கருணாஸுக்காக மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் வெற்றிமாறன்!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் ஃபோட்டோ ஆல்பம்!

கடலுக்கு நடுவே கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

சிம்பு படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட அஷ்வத் மாரிமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments