Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ படத்திற்கு கிடைத்த பாராட்டு

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (15:39 IST)
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பு’ படத்திற்கு, திரைப்பட விழாவில் பாராட்டு கிடைத்துள்ளது.

 
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. இந்தப் படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்னும் திரைக்கு வராத இந்தப் படம், நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 47வது நாட்டர்டாம் திரைப்பட விழாவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டுள்ளது.
 
கடந்த 27, 28 மற்றும் 30ஆம் தேதி என மூன்று காட்சிகள் இதுவரை திரையிடப்பட்டுள்ளன. மூன்று காட்சிகளுமே அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி, படத்தைப் பாராட்டியுள்ளனர். அத்துடன், இன்றும் ஒரு காட்சி திரையிடப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments