கேரளாவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பிரபு தலா ரூபாய் 10 லட்சம் நிதியுதவி..

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (08:33 IST)
இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கேரளா வெள்ள நிவாரண நிதியாக  ரூபாய் 10 லட்சம் அளித்துள்ளார். 

 
தென்மேற்கு பருவமழை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 320 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் வசிக்கின்றனர். 
 
இவர்களுக்கு உதவ பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகினர் மற்றும் பொதுமக்கள். அரசியல் கட்சி தலைவர்கள் நிதி உதவி அளித்து வருகிறார்கள். 
 
அந்த வகையில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். இதேபோல் நடிகர் பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு இணைந்து ரூபாய் 10 லட்சம் கேரளாவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம்!