Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களை எச்சரித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

ரசிகர்களை எச்சரித்த  இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
, புதன், 13 டிசம்பர் 2023 (13:42 IST)
தான் எந்த வலைதளத்தில் இருக்கிறேன் என்பதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர், மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதையடுத்து நடிகர் கார்த்தி நடிப்பில் கைதி, விஜய் நடிப்பில் மாஸ்டர், கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில், விஜய், திரிஷா, சஞ்சய் தத் ஆகியோ நடிப்பில் வெளியான லியோ படம் வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தலைவர் 171 என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இதற்காக பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், இன்று அவரது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியான நிலையில், ‘தான் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் மட்டுமே இருப்பதாகவும்,  வேறு எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்தவில்லை’’ என்று ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் சுவர் ஏறி தப்பிக்க முயற்சித்த போட்டியாளர்.. அறிவுரை கூறியவுடன் அழுத வீடியோ..!