Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிவைக்கப்படும் லிங்குசாமியின் மெஹா பட்ஜெட் மகாபாரதக் கதை!

vinoth
வியாழன், 6 மார்ச் 2025 (10:12 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி. அவர் இயக்கிய ஆனந்தம், ரன், சண்டக் கோழி, பையா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் அவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவில் மோசமான கேலிகளை எதிர்கொண்டது.

படம் பற்றி  லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு அந்த படத்தின் மீதும், இயக்குனர் லிங்குசாமியின் மீதும் ட்ரோல்கள் எழுந்தன.

இதையடுத்து அவர் சண்டகோழி 2 மற்றும் வாரியர் ஆகிய படங்களை இயக்கினாலும் அவரால் இன்னும் கடன் சுமையில் இருந்து மீளமுடியவில்லை. இந்நிலையில் அவர் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மகாபாரதத்தை மையமாக வைத்து அபிமன்யு அர்ஜுன் என்ற படத்தை அவர் விரைவில் இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் பட்ஜெட் காரணமாக தற்போது அந்த படம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் லிங்குசாமி ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகக் கதையைக் கேட்டு இயக்குனருக்குப் பரிசளித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லும் ‘பராசக்தி’ படக்குழு?

விஜய்யின் ‘சர்கார்’ பட ரீமேக்தான் சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படமா?

பட விழாவுக்கு யாரும் அழைக்கவில்லை… ராஷ்மிகா தரப்பு மறுப்பு!

எனக்கு சினிமாவில் நண்பர்கள் இல்லை.. 15 ஆண்டுகள் நிறைவு குறித்து சமந்தா மனம்திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments