Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் லெனின் பாரதியின் அடுத்த பட தலைப்பு ‘கிழக்கிந்திய கம்பெனி’?

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (15:27 IST)
தமிழின் மிகச்சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக வெளியானது மேற்கு தொடர்ச்சி மலை. அந்த படத்தை 6 வருடங்கள் உருவாக்கினார். அதன் இயக்குனர் லெனின் பாரதி. அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

ஆனால் அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த திரைப்படம் தொடங்கப்படவில்லை. இது குறித்த செய்தி சமீபத்தில் வெளியானது. திரைக்கதை எல்லாம் முடிந்துவிட்டாலும், கதைக்களமான திருவண்ணாமலையில் இயக்குனர் லெனின் பாரதி கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறாராம். தயாரிப்பாளர் பா ரஞ்சித் படத்தை தயாரிக்க துரிதப்படுத்தினாலும், கள ஆய்வுக்காக ஒரு ஆண்டு எடுத்துக் கொண்ட பின்னரே படத்தை ஆரம்பிக்க உள்ளாராம் லெனின் பாரதி.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு கிழக்கிந்திய கம்பெனி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் ஒரு புதுமுக நடிகரை நடிக்க வைக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments