Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“உங்கள் ஒட்டுமொத்த மூளையும் புளித்த மாவு…” – எழுத்தாளர் ஜெயமோகனைக் கண்டித்த லெனின் பாரதி!

Advertiesment
“உங்கள் ஒட்டுமொத்த மூளையும் புளித்த மாவு…” – எழுத்தாளர் ஜெயமோகனைக் கண்டித்த லெனின் பாரதி!

vinoth

, திங்கள், 11 மார்ச் 2024 (07:14 IST)
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது. படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மூன்றாவது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவருகிறது. இந்நிலையில் இந்த் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரது இணையதளத்தில் “மஞ்சும்மெல் பாய்ஸ் எனக்கு எரிச்சல் ஊட்டும் படமாக இருந்தது என்றும் அதில் காட்டுவது புனைவு அல்ல, தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் அதே மனநிலை தான் உள்ளது.  குடி குடி குடி என விழுந்து கிடப்பது, வேறு எதிலும் அவர்களுக்கு ஆர்வம் இல்லை, எந்த பொது நாகரீகமும் அவர்களுக்கு கிடையாது. இந்த மலையாள பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது, ஆனால் அவர்கள் மொழி பிறருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற தெனாவட்டு இருக்கும். ஒரு தமிழ் கதாநாயகன் எத்தகைய பொறுக்கிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவானோ, அத்தைய பொறுக்கிதான் இந்த படத்தின் கதாநாயகன்.” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு கடுமையாக எதிர் வினையாற்றியுள்ளார் இயக்குனர் லெனின் பாரதி. அவர் இதுகுறித்து “ஜெயமோகன் அவர்களே., உங்கள் ஒட்டுமொத்த மூளையும் புளித்த மாவு என்றால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கிறது “கேரள பொறுக்கிகள்” “மலையாள குடிகாரப் பொறுக்கிகள்” என்று நீங்கள் கக்கியிருக்கும் இனவெறுப்பு மற்றும் வன்மம் புளித்து பொங்கும் வக்கிர வார்த்தைகள்..” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஹிட் படமான பிரேமலு தமிழிலும் வருகிறது… ரிலீஸ் தேதி அறிவிப்பு!