Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினம் உருவாக காரணம் என்ன? இயக்குநர் குமரவேலன் பேட்டி!

சினம் உருவாக காரணம் என்ன? இயக்குநர் குமரவேலன் பேட்டி!
, வியாழன், 15 செப்டம்பர் 2022 (08:19 IST)
சினம் பட இயக்குநர் குமரவேலன், இப்படம் எமோஷன்ஸ், த்ரில்லர் அனைத்து தரப்பினருக்கும் படம் பிடிக்கும் என பேட்டி.


GNR குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் சினம்.  படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

எமோஷனல் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தின் அனுபவம் குறித்து இயக்குநர் குமரவேலன் பகிர்ந்து கொண்டதாவது, சினம் படம் உருவாக்கம் மற்றும் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும். ஹரிதாஸ் படத்திற்கு பிறகு அருண் விஜய் என்னுடைய வேலையை பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார்.
webdunia

ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகி விட்டார். நானும் வாகா படத்திற்குள் போய் விட்டேன். இதெல்லாம் முடித்து விட்டு அடுத்து இருவரும் சினம் படத்திற்காக ஒன்றிணைந்தோம். இந்த படம் எங்கள் குழுவில் எல்லாருக்கும் திருப்தி அளிக்கும்படி நன்றாக வந்திருக்கிறது.

சினம் கதைக்கான ஆரம்பப்புள்ளி என்ன என்பது குறித்து கேட்ட போது, வாகா படத்திற்கு பிறகு என்னுடைய பலம் என்ன என்பது தெரியாமல், ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தேன். அந்த சமயத்தில் தான் என் தந்தை, என் முந்தைய படமான ஹரிதாஸை குறிப்பிட்டு, அதில் இருக்கும் எமோஷன்ஸ் தான் என்னுடைய ப்ளஸ் என்றார். அதில் இருந்து தான் சினம் படத்தின் பயணம் ஆரம்பித்தது.

த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த மக்களுக்கு பிடித்த வகையிலான எண்டர்டெயினர் படமாக நிச்சயம் சினம் இருக்கும்.  அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் இந்த படத்தை தங்களது வாழ்க்கையோடு கனெக்ட் செய்வார்கள் என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் தான் களையெடுக்க போகிறேன்: வெற்றி பெற்ற கே.பாக்யராஜ் பேச்சு!