Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”பெருமையா இருக்குடா”… டான் இயக்குனரைப் பாராட்டித்தள்ளிய அட்லி!

”பெருமையா இருக்குடா”… டான் இயக்குனரைப் பாராட்டித்தள்ளிய அட்லி!
, வெள்ளி, 13 மே 2022 (15:25 IST)
சிவகார்த்திகேயன் இயக்கத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் அட்லியின் உதவியாளர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.  இன்று ரிலீஸ் ஆன திரைப்படம் பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய உதவியாளர் இயக்கியுள்ள திரைப்படத்தைப் பார்த்த இயக்குனர் அட்லி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “உணர்வுப்பூர்வமான குடும்ப சித்திரம். நன்றி சிவகார்த்திகேயன் – ஒரு புதுமுக இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுத்ததற்கு. சிபி சக்ரவர்த்தி- டைரக்டர் சார். பெருமையாக இருக்குடா. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்காரு வாரிபாட்டா முதள் நாள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல்!