Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம்!

vinoth
புதன், 21 மே 2025 (08:28 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இவர் தன்னுடைய படங்களுக்கான கதையை பிற படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும் தொடர்ந்து அவரது படங்கள் ஹிட்டாவதால் முன்னணி நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க விரும்புகின்றனர்.

இந்நிலையில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இயக்குனர் அட்லிக்கு தமிழகத்தில் செயல்பட்டு வரும் சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. வரும் ஜூன் 14 ஆம் தேதி நடக்கும் பட்டமளிப்பு விழாவில் அவருக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் மீது மோசடி புகார்!

விஜய் சேதுபதியின் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி இதுதான்!

மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவானாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி… ரவி மோகனுக்கு நீதிமன்றம் அவகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments