Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘மாயா’ இயக்குனர் அஸ்வின் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

‘மாயா’ இயக்குனர் அஸ்வின் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?
, திங்கள், 31 ஜனவரி 2022 (17:35 IST)
‘மாயா’ இயக்குனர் அஸ்வின் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘மாயா’ என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் அதன்பின் டாப்ஸி நடித்த 'கேம் ஓவர்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே 
மேலும் இவர் தற்போது நயன்தாரா சத்யராஜ் அனுபம் கெர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ’கனெக்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தன்னிடம் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்த காவியா என்பவரை கடந்த சில வருடங்களாக அஸ்வின் காதலித்து வந்த நிலையில் நேற்று அவரை  திருமணம் செய்துகொண்டார்
 
இந்த திருமணம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அஸ்வின் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த  திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’நானே வருவேன்’ படத்தின் முக்கிய பணி முடிந்துவிட்டது: செல்வராகவன் டுவிட்