Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி சினிமா பின்தங்கியுள்ளது… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைக் குறிப்பிட்டு அனுராக் காஷ்யப் விமர்சனம்!

vinoth
வெள்ளி, 8 மார்ச் 2024 (07:25 IST)
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இப்போது மும்பையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப் பட்டு வருகிறது. இந்த படத்தைப் பார்த்து பாராட்டியுள்ள இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தி சினிமா மிகவும் பின்தங்கி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது பதில் “மஞ்சும்மள் பாய்ஸ் வெகுஜன சினிமாவுக்கான மிகச்சிறந்த உருவாக்கம்.  இந்தியாவில் வெளியாகும் பல பெரிய பட்ஜெட் படங்களை விட இந்த படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஐடியாக்களை இந்தி சினிமா ரீமேக் செய்ய மட்டும்தான் விரும்பும்.  பிப்ரவரி மாதத்தில் வெளியான 3 மலையாள சினிமாக்களின் அடுத்தடுத்த வெற்றியைப் பார்க்கும் போது இந்தி சினிமா எவ்வளவு பின்தங்கி உள்ளது என்பது தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி படத்துடன் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம்!

ஷங்கர் & ராம்சரண் கூட்டணியின் கேம் சேஞ்சர் ரிலீஸ் எப்போது?... இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட தகவல்!

சன்னி லியோன் கிட்ட பேச முடியல… அதுக்காகவே இந்தி கத்துக்கணும்- இயக்குனர் பேரரசு

நந்தன் படத்தைப் பார்த்து அழுதேன்… கைதட்டினேன் –நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

கையில் துப்பாக்கி.. வாயில் லாலிபாப்! வார்னரின் மாஸ் எண்ட்ரி! - புஷ்பா 2 ஷூட்டிங் சீனா?

அடுத்த கட்டுரையில்
Show comments